அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில்கோயம்பேடு பகுதியில் வசிக்கும் நான்அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்துவீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போதுஒரே பைக்கில் வந்த 3 பேர்எனது அந்தரங்க உறுப்பை தொட்டுபாலியல் சீண்டலில் ஈடுபட்டுதப்பினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார்விசாரித்தனர். அதில்கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்த நவநீதன் (19)அவரது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த வீர சஞ்சய் (20) மற்றும் கல்லூரி மாணவன் ஒருவர் என மூவர் சேர்ந்து இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.