மும்பை: நடிகர் ஷாருக்கானிடன் ரூ50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஷ்னோய் சமூக மக்கள் தெய்வமாக கருதும் மானை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கானுக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் தொடர் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சல்மான் கானை தொடர்ந்து லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பெயரில் நடிகர் ஷாருக்கானுக்கு ரூ50 லட்சம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. பாந்த்ரா போலீஸ் நிலையத்துக்கு நேற்று போன் செய்த நபர் ஒருவர் தான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவன் என்றும் நடிகர் ஷாருக்கான் ரூ50 தரவேண்டும்.
இலையென்றால் அவரது உயிருக்கு ஆபத்து என தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் போன் செய்த நபர் சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூர் பகுதியை சேர்ந்த வக்கீல் பயாஸ் கான் என தெரிய வந்தது. அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.