கன்னியாகுமரி: ஆடிபெருக்கு மற்றும் ஆடி அமாவசை ஒட்டி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. சிவப்பு, மஞ்சள் கேந்தி ரூ.40ல் இருந்து ரூ.60க்கும், பன்னீர் ரோஜா ரூ.80ல் இருந்து ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரளி ரூ.60லிருந்து ரூ.170க்கும், சம்பங்கி ரூ.70லிருந்து ரூ.100க்கும், வெள்ளை செவ்வந்தி ரூ.150லிருந்து 200க்கும், துளசி ரூ.20-ல் இருந்து ரூ.30க்கும், தாமரை 2-ல் இருந்து ரூ.5க்கும், பிச்சி மல்லிகை ரூ.400 இருந்து ரூ.600க்கும் விற்கப்படுகிறது.