Wednesday, April 17, 2024
Home » ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி: மாதவரம் எம்எல்ஏ வழங்கினார்

ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி: மாதவரம் எம்எல்ஏ வழங்கினார்

by Karthik Yash

புழல்: சோழவரம் தெற்கு ஒன்றியம் சார்பில், முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, இலவச கண் மருத்துவ முகாம் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா செங்குன்றம் அடுத்த பவானி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக்குழு துணை தலைவருமான கருணாகரன் தலைமை தாங்கினார். சோழவரம் தெற்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் மைக் டைசன், ஒன்றிய கவுன்சிலர் மாலதி மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாதவரம் எம்எல் சுதர்சனம் கலந்துகொண்டு 1000 பேருக்கு இலவச புடவைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி, இலவச கண் மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

You may also like

Leave a Comment

3 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi