சென்னை: தூத்துக்குடி மீனவர்கள் கைது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். மாலத்தீவு கடற்படை கைது செய்த 12 மீனவர்களும் விடுவிக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை உடனடியாக திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.