புதுடெல்லி: மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி பேசுகையில்,“ தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை எண் 138யை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மோசமாகப் பராமரித்து வருகிறது என்று புகார் தெரிவித்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளித்த ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ”தேசிய நெடுஞ்சாலை 138 இல் முக்கிய பராமரிப்புப் பணிகள் 2024 ஆகஸ்டில் நிறைவடைந்தன. தூத்துக்குடி-திருநெல்வேலி பகுதி போக்குவரத்துக்கு ஏற்ற நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி-தூத்துக்குடி பிரிவின் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக ஏற்பட்ட மூலதனச் செலவு 568.14 கோடி ரூபாய் ஆகும். வட்டி க்கான செலவு இதில் சேர்க்கப்படவில்லை. வாகைகுளம் சுங்கச் சாவடியில் பயனர் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை 219 கோடி ரூபாய் ஆகும்” என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு மோசம்: மக்களவையில் கனிமொழி எம்.பி புகார்
0