தூத்துக்குடி: தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் பொன் மாரியப்பன் பணி நீக்கம் செய்யப்பட்டார். 2021ல் லூர்து ஜெயசீலன் என்பவர் கொலை வழக்கில் கைதான தலைமைக் காவலரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவலர் பொன் மாரியப்பன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரை பணி நீக்கம் செய்து எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார்.