சென்னை: தூத்துக்குடி பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பன்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் முத்துக்கண்ணன் விஜய் ஆகியோர் உயிரிழந்தனர். பட்டாசு வெடிவிபத்தில் காயமடைந்த மூன்று பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.