தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைய உள்ள செம்கார்ப் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார். தூத்துக்குடியில் ரூ.36,238 கோடி மதிப்பீட்டில் செம்கார்ப் தொழிற்சாலை அமைய உள்ளது. 1,511 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செம்கார்ப் நிறுவனம், தமிழ்நாடு அரசு இடையே கையெழுத்தானது.