தூத்துக்குடி: தூத்துக்குடியில் நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கியதில் நேரு காலனி, ஆனந்தன் நகர் பகுதியை சேர்ந்த கணேசன், மாரிமுத்து ஆகியோர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.