*பணிகளை துவக்கிவைத்து கனிமொழி எம்.பி. பேச்சு
தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஒருலட்சம் மரக்கன்று நடும் பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் உப்பாறுஓடை தூரும்வாரும் பணியால் கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் முழுமையாக வந்துசேரும் என்றார்.தூத்துக்குடி மாநகராட்சி தருவைக்குளம் உரக்கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கனிமொழி எம்.பி., மரக்கன்று நட்டு இப்பணியைத் துவக்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து, சங்கரப்பேரிகுளம் தூர்வாரும் பணி மற்றும் தூத்துக்குடி மாவட்டம், உமரிக்கோட்டை கிராமம் முதல் புதுக் கோட்டை வரையிலுள்ள உப்பாறுஓடை தூர்வாரும் பணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் கனிமொழி எம்.பி. கூறுகையில் ‘‘இந்த உப்பாற்று ஓடையானது, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் வடக்கு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து உற்பத்தியாகி கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் வழியாக 32 கி.மீ. பயணித்து கோரம்பள்ளம் கண்மாயில் கலக்கிறது. அதன் பிறகு கோரம்பள்ளம் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீரானது உப்பாத்து ஓடை என்னும் பெயரில் 12கி.மீ தொலைவு பயணித்து இறுதியாக வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது. உப்பாறு ஓடை யானது மூன்று சிற்றோடைகளாக தொடங்கி உமரிக்கோட்டை கிராமத்திற்கு அருகே ஒன்று சேர்கிறது. உப்பாறு ஓடையின் மூலம் நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து கிடைக்கப் பெறும் தண்ணீரானது உப்பாறு ஓடை தூர்வாருவதால் கோரம்பள்ளம் குளத்திற்கு முழுமை யாக நீர் வந்தடையும்’’ என்றார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரசுசெயலர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வீரராகவராவ், கலெக்டர் லட்சுமிபதி, எஸ்.பி. பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, ஆணையாளர் மதுபாலன், மாவட்ட வன அலுவலர் ரேவதிரமன், துணைமேயர் ஜெனிட்டா, டிஆர்ஓ அஜய் சீனிவாசன், கோட்டாட்சியர் பிரபு, செயற்பொறியாளர் (கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிாின்ஸ் ராஜேந்திரன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன்,
மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கவுன்சிலர்கள் வைதேகி, நாகேஸ்வாி, சுப்புலட்சுமி, மகேஸ்வாி, தனலட்சுமி, பவாணி மார்ஷல், பேபி ஏஞ்சலின், ஜெயசீலி, காந்திமதி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சிவக்குமார், அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதாதேவி, சிறுபான்மை அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், வனச்சரக அலுவலர் சங்கரன், சுகாதார ஆய்வாளர்கள் ஹாிகணேஷ், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகா், ராஜபாண்டி, மாவட்ட பிரதிநிதி பூபேஸ், ெபாறியாளர் அணி துணைத்தலைவர் செல்வக்குமார், வட்டச்செயலாளர் ராஜன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர் லிங்கராஜா, பிஆர்ஓ நவீன்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.