*கலெக்டர் வழங்கினார்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.46,71,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இளம்பகவத் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 17 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,92,500 மதிப்பிலான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரு.1,37,200 மதிப்பிலான செயற்கை அவயங்கள், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் 841 பயனாளிகளுக்கு ரூ.20,47,000 மதிப்பில் கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு,
79 பயனாளிகளுக்கு ரூ.15,63,000 மதிப்பில் திருமண நிதி உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகள், 12 பயனாளிகளுக்கு ரூ.6,10,000 மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகள், 147 பயனாளிகளுக்கு ரூ.1,76,400 மதிப்பில் புதிய ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான உத்தரவுகள், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.90,000 மதிப்பில் கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகள், 3 பயனாளிகளுக்கு ரூ.1,65,000 மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகள், 17 பயனாளிகளுக்கு ரூ.20,400 மதிப்பில் புதிய ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான உத்தரவு என மொத்தம் 1139 பயனாளிகளுக்கு ரூ.46,71,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இளம்பகவத் வழங்கினார்.
மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் படைவீரர் கொடிநாள் 2022ம் ஆண்டிற்கு மிக நிதி வசூலாக ரூ.5,00,000க்கு மேல் நிதி வசூல் புரிந்த பள்ளிகல்வித்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் ஆளுநரின் பாராட்டு சான்றிதழ்களையும், படைவீரர் கொடிநாள் 2022ம் ஆண்டிற்கு மிக நிதி வசூலாக ரூ.3,00,000 முதல் ரூ.5,00,000 வரை நிதி வசூல் புரிந்த வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் தலைமைச் செயலாளரின் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)சாந்தி, உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) சுஜாதா, தொழிலாளர்துறை உதவி ஆணையர் (ச.பா.தி)ஆனந்த் பிரகாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.