சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 17 அதிகாரிகள் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த நிலையில் அரசு மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாக்கல் செய்யப்பட்டது.