தேவையான பொருட்கள்:
மீன் – 500 கிராம்
புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு
வெங்காயம் – 2
தக்காளி – 2
மிளகாய் – 5-6
மசாலாப் பொடி – தேவையான அளவு
தேங்காய் – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து புளித்தண்ணீர் எடுக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீர், வெங்காயம், தக்காளி, மிளகாய், மசாலாப் பொடிகள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். கலவையில் மீன் துண்டுகளை சேர்த்து, கொதிக்க விடவும். மீன் வெந்ததும், தேங்காய்ப்பால் சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கவும். சாதத்துடன் சேர்த்து, சூடாக பரிமாறவும்.