தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட தொடக்க கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலாளர் ஸ்ரீதரன் உயிரிழந்தார். கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலகத்தில் இருந்து புகை வெளியேறிய நிலையில் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், அலுவலக கதவை உடைத்து நுழைந்தபோது மேலாளர் ஸ்ரீதரன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட மேலாளர் ஸ்ரீதரனை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.