Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காமராஜர் பிறந்த நாள் விழா

கோவில்பட்டி, ஜூலை 16: பெருந்தலைவர் காமராஜரின் 124 பிறந்த நாளையொட்டி அவரது சிலை, படத்திற்கு திமுக, காங், தவெகவினர் மரியாதை செலுத்தினர். கோவில்பட்டியில் உள்ள காமராஜர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு திமுக சார்பில் கருணாநிதி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா சின்னத்துரை, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெயக்கண்ணன், கருப்பசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர், பீட்டர், சிவசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அமலிபிரகாஷ், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு காமராஜர் படத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து லஞ்சம் ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் நகர தலைவர் அருண்பாண்டியன், வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங். தலைவர் ராஜாராம், மாவட்ட பொதுச்செயலாளர் ஐஎன்டியுசி ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளத்தில் காமராஜர் சிலைக்கு தவெக நிர்வாகி எஸ்டிஆர் விஜயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் சாத்தான்குளம் அ.இ.இப்ராகிம் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் டிபன் பாக்ஸ் வழங்கினார். தொடர்ந்து நெடுங்குளத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தவெக நிர்வாகிகள் தங்கத்தாய் பிரபாகரன், ரவிக்குமார், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆறுமுகநேரி மெயின் பஜாரில் தவெக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நிவாஸ் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரைட்டர், காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.முக்காணி, தெற்கு ஆத்தூர், திருச்செந்தூர் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட ஐடி விங் அமைப்பாளர் பெர்ல்ஸ் மபத்லால் தலைமையில் மாவட்ட செயலாளர் பிரைட்டர் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிகளில் மாவட்ட பொருளாளர் சீமான் என்ற சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஆழ்வை கிழக்கு ஜெபபிரபு, திருச்செந்தூர் மேற்கு நீதிபாலன் கார்த்திக், ஆத்தூர் நகர செயலாளர் செல்வமுருகன், அகில இந்திய விஜய் மக்கள் இயக்க மாவட்ட அமைப்பாளர் குட்டி, ஆறுமுகநேரி நகர செயல்வீரர் வினித் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.