Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

கோவில்பட்டி, ஜூலை 16: கோவில்பட்டி அருகே வேலை உறுதி திட்டத்தில் முழுமையாக பணி வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. ஈராச்சி, செமப்புதூர், கசவன்குன்று கிராமங்களில் 100 நாள் திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு முறையாக முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்த கூலியை எந்தவித பிடித்தமும் இல்லாமல் காலதாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும்போது, தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.இந்திய கம்யூ. தாலுகா செயலாளர் சோலையப்பன் தலைமை வகித்தார்.

மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சேது, ரவீந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் எட்டயபுரம் நகரச் செயலாளர் முனியசாமி, நகரக்குழு உறுப்பினர் காளிக்கண்ணையா, தாலுகா குழு உறுப்பினர் சிங்கராஜ், தாலுகாக்குழு துணை செயலாளர் முத்துராஜ், ஏஐடியுசி சுப்புராஜ் மற்றும் ஈராச்சி, செமப்புதூர், கசவன்குன்று ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கி விட்டு கலைந்து சென்றனர்.