சென்னை: பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கியூட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான இளநிலை கியூட் இளநிலை தேர்வு கடந்த மே 13 முதல் ஜூன் 4ம் தேதி வரை நடந்தது. வெளிநாடுகளில் 15 நகரங்கள் உள்பட மொத்தம் 300 நகரங்களில் இந்த தேர்வு நடந்தது. ஆங்கிலம், தமிழ், இந்தி, அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது உள்பட 13 மொழிகளில் நடத்தப்படது. மொத்தம் 13,54,669 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 10,71,735 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. cuet.nta.nic.in என்ற இணையதள முகவரியில், தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இந்த தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்தே, பொது பல்கலைக்கழகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க முடியும்.
நடப்பாண்டுக்கான கியூட் தேர்வு முடிவு வெளியீடு
0