திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே காரில் வைத்து போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசுக்கு கிடைத்த தகவலை அடுத்து காரில் சோதனை மேற்கொண்ட போது கஞ்சா, போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 120 போதை மாத்திரைகள், கஞ்சாவை பறிமுதல் செய்த போலிஸ் கார் டிரைவர் யோகேஸ்வரனை கைது செய்தது.