திருவெறும்பூர்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை சரியாக ஒருங்கிணைக்காமல் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமணி அலட்சியமாக செயல்பட்டதாக கலெக்டருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் அழகுமணியை, கலெக்டர் பிரதீப்குமார் பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.