திருவெறும்பூர், ஜூலை 26: திருவெறும்பூர் அருகே காந்தலுரை சேர்ந்தவர் பிரேம்குமார் (24). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தஞ்சை மாவட்டம் புதுக்குடியை சேர்ந்த நிர்மலா (24) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் ஆனது. நிர்மலா இப்போது நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் கடந்த 23ம்தேதி அன்று வீட்டை விட்டு வெளியில் சென்ற நிர்மலா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் நிர்மலா கிடைக்கவில்லை. நிர்மலாவின் செல்போன் எண்ணை தொ டர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் ஆகி இருநதது. இதையடுத்து நிர்மலா மாயமானதாக நாவல்பட்டு போலீசில் பிரேம்குமார் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன நிர்மலாவை தேடி வருகின்றனர்.