திருச்சி: திருவெறும்பூர் அருகே 3 பேர் கொலை வழக்கில் சப்பானிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ல் வெவ்வேறு காலகட்டங்களில் 8 பேரை கொலை செய்த வழக்கில் சப்பானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே தங்கதுரை, சத்தியநாதன் கொலைவழக்கில் சப்பானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் 3பேர் கொலை வழக்கில் தனித்தனியே ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.