பூந்தமல்லி: திருவேற்காடு நகர திமுக பொதுஉறுப்பினர்கள் கூட்டத்தில் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்று அறிவுரை வழங்கினார். திருவேற்காடு நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகரச் செயலாளரும், நகர்மன்ற தலைவருமான என்.இ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். வார்டு செயலாளர்கள் காந்தி, இளங்கோவன், சத்தியகிரி, தெய்வசிகாமணி, கெஜா, பொன் மனோகரன், துரைகோபால், கண்ணன் ஆகியோர் வரவேற்றனர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பவுல், நகர நிர்வாகிகள் சங்கர், நடராஜன், பானு அரசு, சரவணன், செல்வதுரை, பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில், வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும். அதற்கான பணிகளை இன்றே தொடங்க வேண்டும். இளைஞர் அணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்திட வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான என்.இ.கே.மூர்த்தி ஏற்பாட்டில் 18 வட்ட செயலாளர்களுக்கும் தலா ₹10 ஆயிரம் வீதம் ₹1 லட்சத்து 80 ஆயிரம் ஊக்க நிதியும், இளைஞர் அணிக்கு ₹20 ஆயிரம் ஊக்க நிதியும் வழங்கப்பட்டது.
இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், ஜெரால்டு, ராஜி, தொழுவூர் நரேஷ் குமார், எத்திராஜ், நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், நகர நிர்வாகிகள் குமார், சுதாகர், பிரதானம், தெய்வசிகாமணி, விநாயகம், ரங்கதுரை, பன்னீர்செல்வம், சாது, உமாபதி, ஜெகன், பொன் மனோகரன், துரைகோபால், கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் பரிசமுத்து நன்றி கூறினார்.