Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செவிலிய மாணவர்கள் பங்கேற்றதூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி

மன்னார்குடி, ஜூலை. 21: மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் வேலம்மாள் மெய்ஞான குரு செவிலிய மாணவர்கள் இணைந்து இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணிமருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் குமார் தலைமையில் மன்னார்குடி யில் நேற்று நடந்தது. இப்பேரணியை மாவட்ட இணை இயக்குனர் (சுகாதார பணிகள் ) டாக்டர் அருள்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், குப்பைகளை பொது இடங்களில் வீசக்கூடாது. குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாலிதீன் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும். திறந்த வெளி கழிவறைகளை தவிர்க்க வேண்டும். நீர் நிலைகளை மாசுப்படுத்த கூடாது. அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி செவிலிய மாணவர்கள் பேரணியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை வந்தடைந்தது.