Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 15: நாகை மாவட்டம் துளசியாப்பட்டினம் பகுதியிலிருந்து வடமழை, மணக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய மேலமருதூர் ஏன்ற இடத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 15 நாட்களுக்கு மேலாக ஆற்றில் தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் பல்வேறு கிராமங்களில் அவதியுற்று வரும் நிலையில் குடிநீர் வீணாக ஆற்றில் கலக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட உள்ள உடைப்பை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.