திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வருகின்ற 17ம் தேதி திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனால் மாட வீதிகளில் அமைந்துள்ள ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை ராட்சத வாகனம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.