திருவண்ணாமலை: திருவண்ணாமலை திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் உதயமுத்து மீது மர்மநபர்கள் கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த உதயமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகி உதயமுத்து மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.