திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் நகரில் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. பஸ், ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் அலைந்து திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி நாயின் தாக்குதலுக்கு பலர் இரையாகி வருகின்றனர்.
இந்நிலையில் திருவனந்தபுரம் நகரில் நேற்று மாலை முதல் இரவு வரை ஒரே நாளில் 36 பேரை நாய் கடித்தது பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாப்பனங்கோடு, கரமனை, கிள்ளிப்பாலம் மற்றும் சாலை ஆகிய பகுதிகளில் தெரு நாயின் தாக்குதலுக்கு அந்த பகுதியினர் இரையானார்கள். ஒரே நாய் தான் இவர்களை கடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.நாய் கடித்த 36 பேர் திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பெற்றனர்.