திருச்சி: திருவானைக்காவல் மணல் குவாரியில் சோதனை முடிந்த நிலையில் 3 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்கிறது. ஏற்கனவே 12 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் கூடுதல் விசாரணைக்காக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆறுமுகம், சாதிக் பாட்ஷா, சத்தியராஜ் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.