திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் தரை இறங்கும் விமானங்களுக்கு பறவைகள் பெரும் தொல்லையாக உள்ளன. பறவைகளை விரட்ட விமானங்கள் புறப்படும் போதும் தரை இறங்கும்போதும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இதற்காக 12 இடங்களில் 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராக்கெட்டுகள், குண்டுகள் மற்றும் மேலே சென்று மூன்றாக பிரிந்து வெடிக்கும் ஸ்கை ஷாட் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.3.24 லட்சம் செலவாகும். ஆண்டுக்கு 11 கோடியே 82 லட்சத்து 60 ஆயிரம் செலவாகிறது. 2 ஷிப்டுகளில் மொத்தம் 30 ஊழியர்கள் பட்டாசு வெடிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 24 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. பட்டாசு வெடிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே ஒரு மாத சம்பளத்திற்கு ஆகும் செலவு ரூ.7.20 லட்சம் ஆகும்.