திருவனந்தபுரம்: நான் இங்கே தான் இருக்கிறேன் ; எங்கேயும் ஓடி ஒளியவில்லை என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலக பாலியல் சர்ச்சை குறித்து திருவனந்தபுரத்தில் நடிகர் மோகன்லால் பேட்டியளித்துள்ளார். அதில், அம்மா அமைப்பில் 2 முறை நான் தலைவராக இருந்தேன்; குழு கலைக்கப்பட்டாலும் சங்க செயல்பாடு தடைபடவில்லை. பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டு மொத்த கேரள திரையுலகமும் பதில் சொல்லும். மலையாள திரையுலகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். தற்போதைய பிரச்னைக்கு ‘அம்மா’ அமைப்பை மட்டும் குறை சொல்வதில் நியாயமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.