டெல்லி: புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் என பாஜக முன்னாள் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ட்வீட் செய்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என குறிக்கும் வகையில் சி.டி.ரவி ட்விட்டர்(X) பதிவிட்டுள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்த நிலையில் சமூக வலைதளத்தில் சி.டி.ரவி பதிவிட்டிருக்கிறார்.