திருவள்ளூர்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட பாமக அமைப்பு செயலாளராக கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசனை நியமனம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், இவருக்கு திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எனவே, இவருக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.