திருவள்ளூர்: திருவள்ளூர் புத்தகத் திருவிழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக சிந்தனை அரங்கத்தில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதியின் “பாட்டினைப் பேசுவோம்“ என்ற தலைப்பிலும், கவிஞர் சுகிர்தாராணியின் “வாழ்கையை வாசித்தல்” என்ற தலைப்பிலும் கருத்துரை நடைபெற்றது. இதில், தனித் துணை கலெக்டர் (சபாதி) பாலமுருகன் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்.
திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி, கவிஞர் சுகிர்தாராணி ஆகியோரை மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பு செய்தார். இதில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், கலெக்டர் அலுவலக பொது மேலாளர் சங்கிலிரதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.