Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

100 பொய் சொல்லவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூக்கம் வராது: திமுக அமைப்பு செயலாளர் பேட்டி

திருவள்ளூர், நவ.12: காலை முதல் மாலைக்குள்ளாக 100 பொய் சொல்லவில்லை என்றால், எடப்பாடி பழனிச்சாமிக்கு தூக்கம் வராது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்ததை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று திருவள்ளூரில் நடந்தது. திமுக மாவட்ட செயலாளர்கள் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு, கண்டன உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ, லயன் தாஸ், ஆவடி யுவராஜ், மாவட்ட துணை தலைவர்கள் விக்டரி மோகன், சதாபாஸ்கரன், மதிமுக நிர்வாகிகள் நெமிலிச்சேரி மு.பாபு, இரா.அந்திரிதாஸ், கே.எம்.வேலு, விசிக நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், தளபதி சுந்தர், அருண் கவுதம், ஆதவன், மார்க்சிஸ்ட் ப.சுந்தர்ராஜன், கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கனகராஜ், கஜேந்திரன், முஸ்லிம் லீக் யாசின் மௌலானா, திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் திருத்தணி பூபதி, பி.ஜெ.மூர்த்தி, கே.ஜெ.ரமேஷ், சி.எச்.சேகர், பிரபு கஜேந்திரன், ஜெரால்டு, ஆதிசேசன், திராவிட பக்தன், ராஜி, பகலவன், டாக்டர் குமரன், உதயமலர் பாண்டியன், சி.சு.ரவிச்சந்திரன், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஏற்படுகிற ஆபத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்தியா கூட்டணி கட்சிகள்ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. கரூரில் சம்பவம் நடைபெற்றபோது. 30 நிமிடத்தில் செந்தில்பாலாஜி சென்று பார்த்ததை பெரிய அரசியலாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி மற்றும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினர். இன்றைக்கு மக்கள் அவர்களை பார்த்து கேட்கின்றனர்.

வெடிகுண்டு நடைபெற்ற 20 நிமிடங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்படிச் சென்றார். ஆக தமிழ்நாட்டு மக்கள் இதை எடை போட்டு பார்க்க வேண்டும். கரூரில் செந்தில் பாலாஜியை பார்த்தவுடன் அரசியல் உள்நோக்கம் தெரிவித்த எடப்பாடி, 20 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சென்ற உள்துறை அமைச்சருக்கு வேறு வேலை கிடையாதா என்ற சந்தேகங்களுக்கு அவர்கள் விரைவில் பதில் சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி காலை முதல் மாலைக்குள்ளாக 100 பொய் சொல்லவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. மேலும். எடப்பாடி பழனிச்சாமியின் வாக்கும் பரிபோகக்கூடாது என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.