திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த லட்சிவாக்கத்தில் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தந்தத்துக்கு மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். லட்சிவாக்கம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மாற்று சமூகத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் 3 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. கற்களை வீசி தாக்குதல் நடத்திய 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் தேடி வருகின்றனர்.