திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கப்பட்டது. திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஈக்காட்டில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவரும் ஒன்றிய குழு துணை தலைவருமான எம்.பரக்கத்துல்லாகான் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், நிர்வாகிகள் தென்னவன், மனோகரன், மதுரைவீரன், விமலாகுமார், பிராங்கிளின், ஈக்காடு எஸ்.வேலு, சங்கீதா சீனிவாசன், கபிலன், கருணாகரன், வி.ஜே.உமா மகேஸ்வரன், நாகராஜன், வெள்ளியூர் ஊராட்சி துணைத் தலைவர் முரளி கிருஷ்ணன், தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் இளைஞர்களிடம் திமுகவின் சாதனைகளை எடுத்துச் சொல்லி அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்து மீண்டும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும். அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்கும் ஒன்றிய நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பரிசு வழங்கி பாராட்டுவார் என பேசினார்.
இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, நடுக்குத்தகை கே.ஜெ.ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் ம.ராஜி, வி.ஜெ.சீனிவாசன், காயத்ரி தரன், தொழுவூர் பா.நரேஷ் குமார், த.எத்திராஜ், ஜி.விமல் வர்ஷன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.ஜெயசீலன், த.தங்கம் முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய கவுன்சிலர் எல்.சரத்பாபு நன்றி கூறினார்.