கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி கூட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் தலைவர் பகலவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவி, கதிரவன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தேசராணி தேசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி நிர்வாகி ஜெயலலிதா சசிதரன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மகளிர் ஆணைய தலைவரும், மகளிரணி மாநில இணைச் செயலாளருமான குமரி விஜயகுமாரி, மாநில பிரசாரக்குழு தலைவர் சேலம் சுஜாதா ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ, மகளிரணி மாநில அணிச் செயலாளர் குமரி விஜயகுமாரி, திமுக மாநில பிரசாரக்குழு செயலாளர் சுஜாதா ஆகியோர் வழங்கினர். முடிவில் மகளிரணி நிர்வாகி நளாயினி நன்றி கூறினார்.