திருத்தணி: திருவலாங்காடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருத்தணி அடுத்த திருவலாங்காடு மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் கூளூர் கிராமத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூளூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் அர்ஜுன் ரெட்டி, காஞ்சி பாடி சரவணன், நாபலூர் சுஜாதா குமார், லட்சுமிபுரம் குமரவேலன், நல்லாட்டூர் கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காஞ்சிபாடி யுவராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் நாகராஜ், துணை அமைப்பாளர்கள் ராயல் பாஸ்கரன், லூகா மாநில விவசாய அணி அமைப்பாளர் கடம்பத்தூர் ஆதிசேஷன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாக முகவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்துக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பளிப்பது குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பாக முகவர்களுக்கான படிவத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஏழுமலை, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், இலுப்பூர் சங்கர், திருவலாங்காடு தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.