திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் டிசம்பர் மாதம் முடிய உள்ள நிலையில் திருவலங்காடு ஒன்றிய குழு கடைசி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ஜீவா விஜயராகவன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காளியம்மாள், மகேஸ்வரி ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் 14 ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் வரவு, செலவு கணக்கு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள 16 ஒன்றிய கவுன்சிலர்கள். ஒன்றிய குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜீவா விஜயராகவன், ஒன்றிய துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த சுஜாதா மகாலிங்கம் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வந்தனர்.
ஒன்றிய பொது நிதி இல்லாத நிலையில், அலுவலக செலவினங்கள், மற்றும் அடிப்படை தேவைகளுக்கான செலவினங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஒன்றிய கவுன்சிலர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.