தஞ்சை: திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். பிளஸ் 1 மாணவன் ஹரிபிரசாத், 7ம் வகுப்பு மாணவன் பிரவீன் இருவரும் படித்துறை அருகில் குளிக்கும் போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து இருவரையும் தேடிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.