ராமநாதபுரம்: திருவாடானை இளைஞர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கில் நிலை அறிக்கை தரஉயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. வழக்கு குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய ராமநாதபுரம் எஸ்.பி.க்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருவாடானையைச் சேர்ந்த சிராஜூதீன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூன் 1 ஆம் தேதி முகம் சிதைக்கப்பட்டு அபுபக்கர் என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.