திருவள்ளூர்: திருத்தணி தீ விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தீயில் சிக்கிய பிரேம்குமாரின் ஒரு வயது குழந்தையை தொடர்ந்து மற்றொரு குழந்தையும் உயிரிழந்தது. தீ பற்றி எரியும் போது முதல் தளத்திலிருந்து படி வழியே தப்ப முயன்ற போது உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மீட்டு 4 பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தாய்க்கும், தந்தைக்கும் தீவிர சிகிச்சை தொடர்கிறது.