திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் தரிசனம் செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு, சாமி தரிசனம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, முருகப்பெருமானின் 5ம் படைவீடாக விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் இன்று மதியம் 12 மணியளவில் சாமி தரிசனம் செய்தார்.
இதையொட்டி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில், மலைக்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார முக்கிய பகுதிகளில் டிஎஸ்பி கந்தன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.