Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

திருப்புவனம் அருகே விஷம் குடித்து புதுமண தம்பதி தற்கொலை: போலீசார் விசாரணை

திருப்புவனம்: திருப்புவனம் அருகே திருமணமான 2 மாதங்களில் இளம் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் வினோத்குமார் (22). கட்டுமான தொழிலாளி. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர், வினோத்குமாருக்கு, திருப்புவனம் அருகே உள்ள சொட்டதட்டியை சேர்ந்த பவித்ரா (18) என்பவரை சுப்பையா குடும்பத்தினர் பெண் பார்த்துள்ளனர்.

பின்னர், ஜாதகம் பொருந்தவில்லை என கூறி இரு வீட்டாரும் திருமண பேச்சை நிறுத்தி விட்டனராம். ஆனால், பெண் பார்த்தபோதே ஒருவரை ஒருவர் பிடித்துவிட்டதால், குடும்பத்தினருக்கு தெரியாமல் கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தையடுத்து, சுப்பையா, தனது வீட்டு மாடி பகுதியில் புதுமண தம்பதியை குடியமர்த்தினார். இருப்பினும், சுப்பையாவும், அவரது மனைவியும் புதுமண தம்பதியை அடிக்கடி திட்டி வந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை, புதுமண தம்பதியர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். உடனே அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.