மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில், நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம், பரமசிவம், அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பால் முன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆடு, கோழி வெட்டக்கூடாது என்ற மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி நிஷா பானு. நீதிபதி நிஷா பானு உத்தரவுக்கு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பு அளித்திருந்தார்.
திருப்பரங்குன்றம் வழக்கு: 3ம் நீதிபதிக்கு பரிந்துரை
0