திருநள்ளாறு : திருநள்ளாறு சனிபகவான் கோயில் போலி இணையதள முகவரி தொடர்பான புகாரில் குருக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் குருக்களான வெங்கடேஸ்வர் மீது திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதியப்பட்டுள்ளது. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி சிறப்பு தரிசனம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி பல ஆண்டுகளாக மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், திருநள்ளாறு தேவஸ்தானத்தில் குருக்களாக உள்ள வெங்கடேஸ்வர் மோசடியில் ஈடுபட்டது அம்பலம் ஆகி உள்ளது. வெங்கடேஸ்வருக்கு உடந்தையாக இருந்து இணையதளத்தை நடத்திவந்த பெங்களூருவை சேர்ந்த ஜனனி பரத் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்கள் www.thirunallartemple.com மூலம் அதிக தொகை பெற்று சென்னையிலிருந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியது போலீஸ் விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது. குருக்கள் வெங்கடேஸ்வர், பெங்களூருவை சேர்ந்த ஜனனி, சென்னையை சேர்ந்த நபர் மீது திருநள்ளாறு போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.