ஆவடி: திருமுல்லைவாயல் தென்றல் நகர் நற்கருணைநாதர் ஆலயத்தின் 20ம் ஆண்டு பெருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் ஜெபமாலை மற்றும் திருப்பலி நடந்தன. இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் ‘நற்கருணை எதிர்நோக்கின் வெளிப்பாடு’ என்ற சிந்தனையில் சிறப்பு ஜெபமாலை திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி இன்று இரவு நடக்கிறது. இதில் ஏராளமான இறை மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர். நாளை காலை 8 மணியளவில் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜி.ஜே.அந்தோணிசாமி மற்றும் பங்குதந்தை மரிய செபாஸ்டின் தலைமையில் ‘நலம் தரும் நற்கருணை’ என்ற தலைப்பில் பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் அன்பின் காலை விருந்தும் வழங்கப்படுகிறது.ஆண்டு பெருவிழா நிகழ்ச்சிகளை பங்கு தந்தை மரிய செபாஸ்டின் தலைமையில் அருட்சகோதரர்கள் பங்கு பேரவை உறுப்பினர்கள் அன்பிய பொறுப்பாளர்கள் பக்த சபைகள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்துள்ளனர்.