திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் தலைவராக திமுக சார்பில் போட்டியிட்ட மகாதேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக சார்பில் 8ஆவது வார்டு கவுன்சிலராக உள்ள மகாதேவன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திருமழிசை பேரூராட்சி தலைவராக இருந்த வடிவேலு விபத்தில் உயிரிழந்த நிலையில் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 15 வார்டுகள் உள்ள பேரூராட்சியில் திமுக, அதிமுகவுக்கு தலா 6 கவுன்சிலர்கள் உள்ளனர்.