மதுரை :கூட்டணி ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அமித்ஷா மட்டும்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று, ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை கூட்டணி ஆட்சி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கூட்டணி ஆட்சி உடன்பாடு இல்லையா? என்பதை அதிமுக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்றார்.
கூட்டணி ஆட்சி குறித்து எடப்பாடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை : திருமாவளவன்
0